உத்திரபிரதேசத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற போது உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டது

கோவை : உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.


கோவை : உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.



கோவை, நீலகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் உத்திர பிரதேச மாநிலம் காசிக்கு ரயிலில் ஆன்மிகா சுற்றுலா சென்றுள்ளனர். காசிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, அங்கு நிலவிய கடும் வெயிலால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா கவுடர் மற்றும் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கலாதேவி, தெய்வாணை என்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையப்பா கவுடர் மற்றும் தெய்வாணை ஆகியோரின் உடல்கள் ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. விமானத்தில் வர வேண்டிய 3 பேரின் உடல்கள் அழுகி தூர்நாற்றம் வீசியதாகக் கூறி, விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. இதனால், 3 பேரின் உடல்களும் கோவைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நேற்று மாலையே வர வேண்டிய உடல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. 



இதையடுத்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, நேற்றிரவு 3 பேரின் உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் 3 பேரின் உடல்களும் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல, ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட இருவரின் உடல்கள் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் இன்று காலை கோவை வந்தடைந்தது. இதையடுத்து, 5 பேரின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...