கோவை : தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் கோவையைச் சேர்ந்த 6 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்த்து, தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 7 இடங்களில் குறிப்பிட்ட சில இளைஞர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும், சமூகவலைதளங்களில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். அதில், முகமது அசாரூதின் (கோவை), அசாரூதின் (நஞ்சுண்டாபுரம், போத்தனூர்), சேக் ஹித்யதுல்லா (அலமீன் காலனி), எம். அபுபக்கர் (குனியமுத்தூர்), சதாம் உசேன் (கரும்புக்கடை), இப்ராகிம் சஹின் (மணியா தோட்டம்), அக்ரம் சிந்தா ஆகிய 6 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.