கோவையில் 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை : ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தொடர்பா..?

கோவை : தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் கோவையைச் சேர்ந்த 6 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை : தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் கோவையைச் சேர்ந்த 6 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்த்து, தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 7 இடங்களில் குறிப்பிட்ட சில இளைஞர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும், சமூகவலைதளங்களில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். அதில், முகமது அசாரூதின் (கோவை), அசாரூதின் (நஞ்சுண்டாபுரம், போத்தனூர்), சேக் ஹித்யதுல்லா (அலமீன் காலனி), எம். அபுபக்கர் (குனியமுத்தூர்), சதாம் உசேன் (கரும்புக்கடை), இப்ராகிம் சஹின் (மணியா தோட்டம்), அக்ரம் சிந்தா ஆகிய 6 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...