கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வேலாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.
கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வேலாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.
வேலாண்டிபாளையம் நல்லம்மாள் வீதி, கிருஷ்ணகோயில் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி வாயிலாக லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறதா..? எனவும், நல்ல தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வருகிறது எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி சீரான முறையில் கிடைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும், மாநகராட்சிப் பணியாளர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வேலாண்டிபாளையம் தெக்கலூர் ஓடை பகுதியில் குப்பைகளை அகற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னாராமசாமி, உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், மாநகர நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் சசிப்பிரியா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர்கள் சத்யமூர்த்தி, ஏஞ்சலினா ஆகியோர் கலந்து கொண்டனர்.