வேலாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

​கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வேலாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.


​கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வேலாண்டிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.

​வேலாண்டிபாளையம் நல்லம்மாள் வீதி, கிருஷ்ணகோயில் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி வாயிலாக லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறதா..? எனவும், நல்ல தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வருகிறது எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி சீரான முறையில் கிடைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.



​மேலும், மாநகராட்சிப் பணியாளர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வேலாண்டிபாளையம் தெக்கலூர் ஓடை பகுதியில் குப்பைகளை அகற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அறிவுறுத்தினார்.



​இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னாராமசாமி, உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், மாநகர நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் சசிப்பிரியா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர்கள் சத்யமூர்த்தி, ஏஞ்சலினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...