கோவையில் ’கஸ்தூரி வனம்’ என்ற திட்டம் துவக்கம் : வெள்ளலூர் நொய்யல் ஆற்றோரம் மரக்கன்றுகள் நட முடிவு

கோவை : உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை நகரை பசுமையாக்கும் நோக்கத்தில் யுவா பவுண்டேஷன் ’கஸ்தூரி வனம்’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.

கோவை : உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை நகரை பசுமையாக்கும் நோக்கத்தில் யுவா பவுண்டேஷன் ’கஸ்தூரி வனம்’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.

சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மரக்கன்றுகளை சரியான இடத்தில் நட்டு பராமரிக்க விரும்பும் எந்த நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. மாநில அளவிலும், நகரங்களிலும் பசுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்களை தவிர்க்க, இத்தகயை முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவில் மரங்களை நடுவதால், அதிக மழையும், நல்ல சூழலையும் பெற முடியும். நொய்யல் கரையோரம் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் மரக்கன்றுகளை நடுவதால், இந்த செய்தி, நாட்டின் வருங்கால மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் சென்றடையும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



இத்கனிடையே, சுற்றுச் சூழல் முயற்சியின் துவக்கமாக எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அருகே உள்ள நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், எஸ்.எஸ்.வி.எம் நிர்வாக அறங்காவலர் மற்றும் நிறுவனர் முனைவர் மணிமேகலை மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திரா யுவா பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நகரில் பல இடங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக, சந்திரா யுவா பவுண்டேஷன் இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. ஏற்கனவே இந்த பவுண்டேஷன், பல இடங்களை தூய்மைப்படுத்தும் விதமாக உக்கடம் பஸ் ஸ்டாண்டை தூய்மை செய்து, சுவர்களில் வண்ணம் தீட்டியுள்ளோம். சிறையில் உள்ள மகளிருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மரக்கன்று நடும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்,’’ என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...