கோவை : கோவையில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 5 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்கடம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மார்க் கடையை மூடக்கோரி கடந்த 2010-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களில் சிலர் கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடையை சேதப்படுத்தியதாக நசீர், அபுதாஹிர், வளையல் ஹக்கீம், காஜா ஹுசைன், முஜிபுர் ரஹ்மான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கோவை நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கும் ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் ஒருவரான வளையல் ஹக்கிம், 2013-ம் ஆண்டு பெங்களூரில் பா.ஜ.க. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.