திருப்பூர் : திருப்பூரில் போலீசார் சட்டவிரோதமாக 5 நாட்களாக அடைத்து வைத்திருக்கும் தனது சகோதரரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு மாநகராட்சி ஒப்பந்ததாரர் அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வாவிபாளையத்தில் கடந்த மே மாதம் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தன. இந்த சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர் எம்.எஸ். நகரில் வசித்து வரும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தினகரன் என்பரது சகோரர் ராஜா என்பவருக்கு திருட்டு சம்பவத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ராஜாவை சாதாரண உடையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது சகோதரர் ராஜா குறித்து தினகரன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களுக்கு சென்று விசாரித்து கொண்டிருந்த போது, ராஜாவின் கார் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குறித்து எந்த ஒரு தகவலையும் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிரது.

இந்த நிலையில், இன்று திருமுருகன்பூண்டி காவல்நிலையம் வந்த தினகரன், தனது சகோதரை மீட்க மேல்சட்டையை கழற்றி காவல்நிலையம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தினகரனை சமாதானப்படுத்திய போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது சகோதரர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதன் விவரங்களை வழங்கினர். இதையடுத்து, காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.