சூலூரில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சூடான் நாட்டு வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : சூலூர் அருகே விசா காலக்கெடு முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி வந்த சூடான் நாட்டு வாலிபர், பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போது பொது மக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை : சூலூர் அருகே விசா காலக்கெடு முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி வந்த சூடான் நாட்டு வாலிபர், பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போது பொது மக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வழிப்பறி சம்பவங்கள் சூலூர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அதேபோல, இந்த சூலூர் காவல் எல்லை பகுதியில் நைஜீரியர்கள் மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களால் சூலூர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சூலூர் எஸ்.எல்.வி. நகரில் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செல்போன் பறித்ததாக அப்பகுதி மக்கள் சூடான் நாட்டு வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சூடான் நாட்டின் நொயாலி என்ற ஊரைச் சேர்ந்த இஷா என்பவரது மகன் முகமது இஷா (23 )என தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் படிப்பதற்காக 5 ஆண்டு விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பதும், அவரது விசா காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், இவர் இங்கு வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர், சூடான் நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, சூலூர் காவல் எல்லைப் பகுதியில் அரங்கேறி வரும் குற்றச்சம்பவங்களுக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விசா இல்லாமல் சூலூர் எல்லைப்பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டினரை காவல்துறையினர் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...