கோவை : சூலூர் அருகே விசா காலக்கெடு முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி வந்த சூடான் நாட்டு வாலிபர், பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போது பொது மக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வழிப்பறி சம்பவங்கள் சூலூர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அதேபோல, இந்த சூலூர் காவல் எல்லை பகுதியில் நைஜீரியர்கள் மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களால் சூலூர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சூலூர் எஸ்.எல்.வி. நகரில் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செல்போன் பறித்ததாக அப்பகுதி மக்கள் சூடான் நாட்டு வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சூடான் நாட்டின் நொயாலி என்ற ஊரைச் சேர்ந்த இஷா என்பவரது மகன் முகமது இஷா (23 )என தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் படிப்பதற்காக 5 ஆண்டு விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பதும், அவரது விசா காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், இவர் இங்கு வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர், சூடான் நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சூலூர் காவல் எல்லைப் பகுதியில் அரங்கேறி வரும் குற்றச்சம்பவங்களுக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விசா இல்லாமல் சூலூர் எல்லைப்பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டினரை காவல்துறையினர் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.