திருப்பூரில் கிணற்றுக்குள் பாய்ந்து கார் விழுந்த சம்பவம் : அதிர்ஷ்டவசமாக 5 பேரும் பத்திரமாக மீட்பு

திருப்பூர் : திருப்பூர் அருகே எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு இன்று மதியம் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 5 அடி மட்டுமே நீர் இருந்த நிலையில் உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டு, கிணற்றுக்குள் விழுந்த காரையும் மீட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...