நேரு மகா வித்யாலயா கல்லூரி வரை அரசு பேருந்துகளை இயக்கக்கோரி அமைச்சரிடம் மனு

கோவை : மலுமச்சம்பட்டியில் உள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரி வரை அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் வழங்கப்பட்டது.

கோவை : மலுமச்சம்பட்டியில் உள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரி வரை அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் வழங்கப்பட்டது. 

கோவை நலவாரிய சங்கத்தின் தலைவர் ரமேஷ் பஃப்னா, செயலாளர் அசோக் குண்டேச்சா, எஸ்.என்.எம்.வி. கல்லூரியின் முதல்வர் பி. சுப்ரமணி உள்ளிட்ட பலர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், அரசுப் பேருந்துகளை நேரு மகா வித்யாலாயா கல்லூரி அமைந்துள்ள சாலைகள் வரை இயக்க வேண்டும் என சுமார் 3,000 தொழில்நிறுவனத்தினர் மற்றும் குடியிருப்பு வாசிகளின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர். 



மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதிகளை கல்லூரி வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும், எல்&டி சாலை சந்திப்பில் கல்லூரியின் பெயர் பலகையை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், சட்டதிட்டங்களுக்குட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...