நீலகிரி : குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் இல்லாததால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையில் குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இதேபோன்று, பிரசவ வார்டு குழந்தைகள் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.