உற்பத்தி குறைவால் உதகை உருளைக்கிழங்கிற்கு அமோக வரவேற்பு : நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி : மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் உதகை உருளைக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி : மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் உதகை உருளைக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்படும் மலைக்காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு எப்போதும் தனிசுவையுடன் இருப்பதால் மார்கெட்டில் இதற்கென தனித்துவம் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 



ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். 45 கிலோ எடை கொண்ட ஒரு உருளைக்கிழங்கு மூட்டையின் விலை ரூ. 700 முதல் ரூ. 900 வரையே அதிகபட்சமாக விற்பனையானது. மேட்டுப்பாளையம் மொத்த மார்கெட்டிற்கு தினசரி 70 முதல் 80 லோடு உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு கொண்டு வரப்படும். கடந்த சில மாதங்களாக அதன் நிலையற்ற விலை மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உற்பத்தி குறைந்து 10 லோடாக வரத்து வெகுவாக குறைந்து வந்தது. இதனிடையே, தொடர்ந்து சரிவில் இருந்த உருளைக்கிழங்கு மார்கெட் நீண்ட இடைவேளைக்கு தற்போது மீண்டு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மொத்த ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் ஏலம் எடுத்ததால் ரூ.1,700 முதல் ரூ.1, 800 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



நீலகிரி உருளைக்கிழங்கு வரத்து குறைவாக இருந்தாலும் கிழங்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதால், தற்போது நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைத்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், எதிர்வரும் காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருளைக்கிழங்கிற்கு மீண்டும் மவுசு கூடியிருப்பதால் அதன் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...