கொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

கோவை : கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக்கின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக்கின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடவுள் மறுப்பு கொள்கை பேசியதற்காக 5 பேர் கொண்ட கும்பலால் அவர், உக்கடம் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் பாரூக்கின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாரூக்கின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், ஒரு லட்ச ரூபாய் குழந்தைகள் இருவர் பெயரில் வங்கிக் கணக்கிலும், மனைவி மற்றும் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட வேண்டும் என நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...