நீலகிரி : குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் மண்சாலையில் 3 வயது பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கரடிகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் உலா வருகின்றன. அதில், 3 வயது மிக்க பெண் கரடி பழத்தோட்டத்திலிருந்து சோகத்தொரைக்கு செல்லும் சாலையின் ஓரத்திலுள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் சாலையில் துடிதுடித்துக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், வனத்துறையினர் வர தாமதம் செய்தனர். பின்னர், வந்த கால்நடை மருத்துவர் கண்ணன், அதற்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை கொடுக்க தயாரானார். அதற்குள் கரடி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. கரடிக்கு விஷம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதா..? அல்லது வலிப்பு ஏற்பட்டு கரடி இறந்ததா..? என வனத்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கரடியை காண்பதற்கு கிராம மக்கள் அந்தப் பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்குப் பிறகு வனத்துறை மருத்துவர்கள் கரடியைப் பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே எரித்தனர்.