குன்னூரில் 3 மணிநேரம் துடிதுடித்து இறந்த பெண் கரடி : விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா..? என வனத்துறையினர் விசாரணை

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் மண்சாலையில் 3 வயது பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் மண்சாலையில் 3 வயது பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கரடிகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தில் 3-‌க்கும் மேற்பட்ட கரடிகள் உலா வருகின்றன. அதில், 3 வயது மிக்க பெண் கரடி பழத்தோட்டத்திலிருந்து சோகத்தொரைக்கு செல்லும் சாலையின் ஓரத்திலுள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் சாலையில் துடிதுடித்துக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 



இதனைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், வனத்துறையினர் வர தாமதம் செய்தனர். பின்னர், வந்த கால்நடை மருத்துவர் கண்ணன், அதற்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை கொடுக்க தயாரானார். அதற்குள் கரடி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. கரடிக்கு விஷம் வைக்கப்பட்டுக் ‌கொல்லப்பட்டதா..? அல்லது வலிப்பு ஏற்பட்டு கரடி இறந்ததா..? என வனத்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கரடியை காண்பதற்கு கிராம மக்கள் அந்தப் பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்குப் பிறகு வனத்துறை மருத்துவர்கள் கரடியைப் பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே எரித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...