கோவை : தேசிய தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், நாடு முழுவதும் 56..57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை : தேசிய தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், நாடு முழுவதும் 56..57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,23,078 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், வெறும் 59,785 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கே. ஸ்ருதி (685/720) தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 57-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கர்வண்ணா பிரபு 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் 39.56 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 48.57 விகிதமாக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை நளினி ஹந்தேவால் 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பவிக் பன்சாலி (டெல்லி), அக்ஷத் கவுசாலி (உ.பி.) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.