கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 'காற்றுமாசைத் தவிர்ப்போம்' என்பதை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சிறுவாணி விழுதுகள் சார்பில் நொய்யலின் பிறப்பிடமான சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள மத்வராயபுரம் கிராமத்தில், காலநிலை மாற்றங்களை தவிர்க்கும் வகையிலும், இயற்கையாய் இருக்கும் வளிமண்டல ஈரப்பதத்தையும், காற்று மாசுபாட்டையும், வாகன புகையினால் வெளியேறும் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டது.