கோவை : மேட்டுப்பாளையம் அருகே கடந்த 2 மாதங்களாக விளைநிலங்களை அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, வனத்துறை அதிகாரிகளை 5 மணி நேரத்திற்கும் மேல் விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மேற்கு பகுதியான வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சீளியூர், மேல்பாவி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இங்கு முகாமிட்டுள்ள காட்டுயானைகள் இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல முறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு தோலம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மீண்டும் காட்டுயானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து, யானையை விரட்ட காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த காட்டு யானைகள் ஊடுருவல் குறித்து பல முறை புகார் அளித்தும், அதனை தடுக்க வனத்துறை தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், நள்ளிரவு வரை வனத்துறை அதிகாரிகளை வாகனங்களுடன் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள், தொடர்ந்து இரண்டு மாதமாக விவசாய பயிர்களை நாசம் செய்து வரும் காட்டு யானைகளை, கும்கியானைகளை கொண்டு விரட்ட வேண்டும் அல்லது மயக்க ஊசி செலுத்தி யானைகளை காடு கடத்த வேண்டும் என்றும், அதனை மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசி நாளை மீண்டும் காட்டுயானைகள் நுழையாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். தோலம்பாளையம் கிராமத்தில் நள்ளிரவில் வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.