சென்னை : ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இளையராஜாவின் பாடல்களை வணிக ரீதியாக பாடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அண்மையில் பிரபல பாடகர்கள் தங்களது மேடை நிகழ்ச்சிகளிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பாடி வந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா, தனது பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சில தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்சினையில் இளையராஜா தீவிரமாக இயங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாகவும், எனவே வணிக ரீதியிலான இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இளையராஜா தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று அவரது பாடல்களை மேடைகளில் பாட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.