கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம்

திருப்பூர் : நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக் கோரியும் காடா துணி ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கோரியும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக் கோரியும் காடா துணி ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கோரியும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கழிவு பஞ்சு ஏற்றுமதி காரணமாக நூல் விலை அதிகரித்துள்ளதாகவும், காடா துணியின் விலை குறைந்தும் வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாகவும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நூல் விலையை சீராக வைத்திருக்க வலியுறுத்தியும், மூலப்பொருளான கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உற்பத்தி பொருட்களான காடா துணியை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 25 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 



இதனால், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...