நீலகிரி சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதா..? என ஆர்.டி.ஓ. ஆய்வு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், தின்பண்ட காகிதங்கள் உள்ளிட்ட வீணானப் பொருட்களை பயணத்தின் போது, சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரியில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



இந்த நிலையில், இது தொடர்பாக ஆர்.டி.ஓ., கதிரவன் கூறுகையில், "நீலகிரியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 5,078 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இம்மாவட்டத்தில் வாகன விபத்து குறைந்துள்ளது. அதே சமயத்தில், குடிபோதை, சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவது என பல்வேறு விதிமீறலுடன் வாகனங்களை இயக்கியதற்காக வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற விதிமீறலை சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து செய்து வந்ததால், அவர்களின் லைசென்ஸ் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...