திருப்பூரில் ரயில் தண்டவாளம் அருகே கூலித் தொழிலாளி சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே இன்று காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியர் என்பதும், அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் எனவும் தெரிந்தது. சடலமாக மீட்கப்பட்ட செபாஸ்டியரிடம் இருந்து ஆறு செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...