கோவை : இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள் வரும் 30-ம் தேதி வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மக்களை தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் வழங்கப்பட்டது. அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
484 பக்கம் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களை இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் 3-வது மொழியாக தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் கற்பிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள் ஜுன் 30-ம் தேதி வரை தங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
இதனிடையே, மத்திய அரசின் இந்தி திணிப்புக்கான நடவடிக்கை என ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால், தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அக்கட்சியின் மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி இன்று கூறியுள்ளார்.