அனைத்து மாநிலங்களிலும் இனி இந்தி கட்டாயம் : புதிய கல்விக் கொள்கை குறித்து 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

கோவை : இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள் வரும் 30-ம் தேதி வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள் வரும் 30-ம் தேதி வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மக்களை தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் வழங்கப்பட்டது. அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

484 பக்கம் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களை இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் 3-வது மொழியாக தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் கற்பிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள் ஜுன் 30-ம் தேதி வரை தங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

இதனிடையே, மத்திய அரசின் இந்தி திணிப்புக்கான நடவடிக்கை என ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால், தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அக்கட்சியின் மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி இன்று கூறியுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...