உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி : திருப்பூரில் டிராவல்ஸ் அதிபர் கைது

திருப்பூர் : உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் : உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் - அவிநாசி சாலையில், பங்ளா நிறுத்தம் பகுதியில் 'டிராவல் கிராப்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன். இவரிடம் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடும்பமாகவும், தனி நபராகவும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா செல்ல திட்டமிட்டு, பயணச்சீட்டிற்காக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு பணமாக மாற்றி கொடுக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், விசா மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட தேதியில் வெளிநாடு அழைத்து செல்லாமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கச் செய்துள்ளனர். 

மேலும், பாதிக்கப்ப்ட்டவர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அலுவலகத்தை பூட்டிவிட்டு மணிகண்டன் தலைமறைவானது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சுற்றுலா அழைத்து.செல்லவதாகக் கூறி ஒரு கோடிக்கும் மேல் பணம் மோசடியில் ஈடுபட்ட மணிகண்டனிடமிருந்து பணத்தையும், பாஸ்போர்ட்டை மீட்டுத்தர கோரி புகார் அளித்தனர்.



இந்த நிலையில், டிராவல் கிராப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனை போலீசார் கைது செய்து, ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கவியரசன் மணிகண்டனுக்கு 15 நாள் நீதிமன்ற நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...