உதகையில் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிப்பு

நீலகிரி : உதகையில் ஓம் சாந்தி மற்றும் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் ஓம் சாந்தி மற்றும் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. 



உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதகையில், ஓம் சாந்தி மற்றும் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பேசும் போது :- புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் 2-வது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.



அமெரிக்காவின் புற்றுநோய் ஒழிப்பு கழகம் நடத்திய ஆய்வறிக்கை கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், இந்தியாவில் புகைப்பிடிக்க தினமும் 2 கோடி செலவு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 730 கோடிக்கு மேல் இந்தியர்கள் புகை பிடிக்க செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது. புகையிலைப் பாக்கெட்களில் 70 சதவீதம் விழிப்புணர்வு படங்களை அச்சிட வேண்டும். இந்த படங்களை அனைவரும் பார்க்கும் வகையில், பாக்கெட்டுகளாக மட்டுமே சிகரெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது 

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 100 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்து அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புகையிலை விற்பனையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்சியில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...