நீலகிரி : உதகையில் ஓம் சாந்தி மற்றும் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதகையில், ஓம் சாந்தி மற்றும் காவல்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பேசும் போது :- புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் 2-வது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புற்றுநோய் ஒழிப்பு கழகம் நடத்திய ஆய்வறிக்கை கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், இந்தியாவில் புகைப்பிடிக்க தினமும் 2 கோடி செலவு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 730 கோடிக்கு மேல் இந்தியர்கள் புகை பிடிக்க செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது. புகையிலைப் பாக்கெட்களில் 70 சதவீதம் விழிப்புணர்வு படங்களை அச்சிட வேண்டும். இந்த படங்களை அனைவரும் பார்க்கும் வகையில், பாக்கெட்டுகளாக மட்டுமே சிகரெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 100 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்து அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புகையிலை விற்பனையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்சியில் வலியுறுத்தப்பட்டது.