நீலகிரி : கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, உபதலை போன்ற சாலையில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தகிரி, கட்டபெட்டு - பில்லிக்கம்பை சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இச்சாலையின் இருபுறங்களிலும் விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்களாக செடிகள் அகற்றப்படாததால், காற்று வீசும் திசைகளில் விதைகள் உதிர்ந்து, புதிதாக செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கின்றன. மேலும், தற்போது இரவு நேரத்தில் மழைப் பெய்து வருவதால், இவற்றின் வளர்ச்சி அசுரவேகத்தில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள் உட்பட பெரும்பாலான மக்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், ஆஸ்துமா, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றி நிலத்தை பண்படுத்துவதற்காக எரிக்கும் போது, புகை மண்டலமாக மாறுவதால், மக்கள் கடுமையாகப் பாதித்து வருகின்றனர். இதுதவிர, செடிகளால் கால்நடைகளுக்கு உடல் உபாதை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகளை, வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.