மத்திய அமைச்சராகிறார் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமார்

கோவை : பா.ஜ.க., அரசு மத்தியில் இன்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், அமைச்சரவையில் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : பா.ஜ.க., அரசு மத்தியில் இன்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், அமைச்சரவையில் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தாலும், நாடு முழுவதும் அக்கட்சி 303 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இன்று மாலை மோடி பிரதமராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் யார், யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 3-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே, பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சரவை பொறுப்பில் இருந்து விலகுவதாக மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகலாம் என கூறப்படுகிறது. இதே போல் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கூட்டணி தர்மப்படி அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான போது, மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...