சென்னை : சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த கந்தசாமி சூலூர் தொகுதியிலும், விளாத்திகுளம் தொகுதியில் சின்னப்பனும், சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனும், அரூர் தொகுதியில் சம்பத்குமாரும், நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழியும் வெற்றி பெற்றனர். இதேபோல, மானாமதுரை தொகுதியில் நாகராஜனும், பாப்பிரெட்டிபட்டியில் கோவிந்தசாமியும், பரமக்குடி தொகுதியில் சதன் பிரபாகரனும், சோளிங்கர் தொகுதியில் சம்பத் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் தனபால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.