சூலூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற கந்தசாமி உள்பட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு

சென்னை : சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை : சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த கந்தசாமி சூலூர் தொகுதியிலும், விளாத்திகுளம் தொகுதியில் சின்னப்பனும், சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனும், அரூர் தொகுதியில் சம்பத்குமாரும், நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழியும் வெற்றி பெற்றனர். இதேபோல, மானாமதுரை தொகுதியில் நாகராஜனும், பாப்பிரெட்டிபட்டியில் கோவிந்தசாமியும், பரமக்குடி தொகுதியில் சதன் பிரபாகரனும், சோளிங்கர் தொகுதியில் சம்பத் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் தனபால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...