கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியரின் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

கோவை : கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். பிஸ்.எல்.என்.எல் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், நேற்று குடும்பத்துடன் உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நள்ளிரவு வீடு திரும்பிய போது, வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கம் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். 



இதில், வீட்டில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் அதிகளவு குடியிருக்கும் இந்த பகுதியில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...