கோவை : செல்வபுரம் அருகே நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் ஹவுசிங் யூனிட் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நுழைந்த நபர் ஒருவர் 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த சம்பவம் தொடர்பாக ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சாதிக் பாஷாவின் வீட்டில் கொள்ளையடித்த திருடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.