இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்  : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடையன்கிணறு பகுதியில் 600-க்கும்.மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வரும் நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன், எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனமானது கோழித்தீவனம் அரைப்பதாக தொடங்கப்பட்டது. நாளடைவில், தற்போது 2 வருடங்களாக கோழிக்கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கழிவுகளை இயந்திரத்தில் அரைக்கும் போது, வெளியேறும் நச்சு புகையால், அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மூச்சுத் திணறல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும், அலட்சியமாக இருந்து வந்தனர். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக் கோரி மனு அளித்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...