ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், துடியலூர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழு மற்றும் துடியலூர் காவல்துறை சார்பில், துடியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, கோவை–மேட்டுப்பாளையம் சாலை வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று விஸ்வநாதபுரம் அருகே நிறைவடைந்தது.



இந்த பேரணியை, கோவை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையர் தங்கதுரை ஐபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், துடியலூர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், “ஒரு கணம் போதை, ஆயுள் முழுவதும் வேதனை”, “போதைக்கு அடிமையாவதை விட கனவிற்கு அடிமையாகுங்கள்”, “போதையின் பாதையை தவிர்ப்போம்; நலமான வாழ்வை உருவாக்குவோம்”, “போதைப் பொருள் வாழ்க்கையின் எதிரி” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், போதைப் பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.



முன்னதாக, துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடக்கு துணை ஆணையர் தங்கதுரைக்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் டாக்டர் டி. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து, துணை ஆணையர் தங்கதுரை மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், சமூகத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தெரிந்தால், அவர்களை நல்வழிப்படுத்தி போதையில் இருந்து மீட்டெடுக்க தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், “போதையில்லா தமிழகம் உருவாக மாணவர்கள் முழுமனதுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் சரவணன், போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன், கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி, குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி, புலனாய்வு கட்டுப்பாட்டு அமைப்பின் முரளிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பார்த்திபன், துடியலூர் காவல் நிலைய காவலர்கள், போதை தடுப்பு மன்ற தலைவர் பூபால்ராஜ், தேசிய மாணவர் படை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் விணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...