கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த கும்பல், தாயின் கண் முன்னே கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த கும்பல், தாயின் கண் முன்னே கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவர் ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அவரது தாயாருடன் வீரகேரளம் அருகே மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் இருந்து கீழே தள்ளி கத்தியால் சரமாரியாகக் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில், மகனை காப்பாற்றுமாறு சந்தோஷின் தாயார் பிரேமலதா கதறி அழுதுள்ளார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்தோஷ், தாயின் கண்முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குடியரசுக் கட்சியில் அவருடைய சித்தப்பாவுடன் இணைந்து பணியாற்றி வந்த சந்தோஷ், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பின்னர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நபர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த கும்பல் இவரை கொலை செய்ததாகத் தெரிய வருகிறது. இதனிடையே, இந்த கொலை காரணம் குறித்து ஆதாரங்களை திரட்டி வரும் காவல்துறையினர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.