மார்ட்டின் நிறுவன ஊழியர் மரணம் சம்பவம் : புலன் விசாரணையை தொடங்கினார் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி

சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு குறித்து மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார்.


கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு குறித்து மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார்.

காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் கடந்த 3ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் ரோகின் குமார் மனு தாக்கல் செய்தார். மேலும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, காசாளர் பழனிச்சாமியின் சடலத்தை மறுபிரேதப் பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுக வேண்டும் என்றும், பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தேவையில்லை, மாஜிஸ்திரேட் விசாரணையே தொடரும் என தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில், மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவதுறை அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார். இந்த புலன் விசாரணையில் உயிரிழந்த பழனிச்சாமியின் மனைவி, மகன் மற்றும் அவர்களது தரப்பினர் என ஐந்து பேரும், காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...