சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு குறித்து மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார்.
கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு குறித்து மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார்.
காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் கடந்த 3ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் ரோகின் குமார் மனு தாக்கல் செய்தார். மேலும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, காசாளர் பழனிச்சாமியின் சடலத்தை மறுபிரேதப் பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுக வேண்டும் என்றும், பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தேவையில்லை, மாஜிஸ்திரேட் விசாரணையே தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவதுறை அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் புலன் விசாரணையை துவக்கினார். இந்த புலன் விசாரணையில் உயிரிழந்த பழனிச்சாமியின் மனைவி, மகன் மற்றும் அவர்களது தரப்பினர் என ஐந்து பேரும், காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
