பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோவை : ஜெர்மனியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் பங்கேற்றுள்ளார்.


கோவை : ஜெர்மனியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் பங்கேற்றுள்ளார். 

ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு இணைந்து ஹெய்டெல்பெர்க் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பருவநிலை மாற்றத்தில் அனுபவமிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் மாநகராட்சி ஆணையர் பதவி பொறுப்பில் இருப்பவர்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இவருடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை செயலாளர் குணல் குமார், அம்ரூத் திட்டத்தின் உதவி இயக்குநர் நேஹா சிங் மற்றும் ஆலோசகர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த மாநாட்டின் நோக்கமானது, பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்கள், பிராந்தியங்களின் அதிகாரமிக்க தலைவர்களை ஒன்றிணைத்து பருவநிலை மாறுதலுக்கு காரணமாக இருக்கும் நடவடிக்கை குறைப்பதற்கான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த மாநாட்டின் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பருவநிலை மாறுதலுக்கான மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...