கோடை வெப்பம் காரணமாக மக்களிடையே வரவேற்பை பெற்ற குளிர்பானங்கள் : தேயிலை ஏல விற்பனையில் மந்தநிலை

நீலகிரி : குன்னூர் கோடை வெப்பம் காரணமாக தேநீர் விற்பனை குறைந்து, குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது. இத்கனால், தேயிலை ஏல விற்பனையில் மந்தநிலை நிலவியதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி : குன்னூர் கோடை வெப்பம் காரணமாக தேநீர் விற்பனை குறைந்து, குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது. இத்கனால், தேயிலை ஏல விற்பனையில் மந்தநிலை நிலவியதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும், நீலகிரி முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், தேயிலை வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.



இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். இதில், தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடந்த ஏலத்தில் மொத்தம் 12 லட்சத்து ஒரு ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில், 10 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ. 10 கோடியே 83 லட்சமாகும். இது 92 சதவீத விற்பனை ஆகும்.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ. 187 ஆகவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.249 என விற்பனையானது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ. 94 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ. 112 முதல் ரூ.118 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ. 85 முதல் ரூ. 92 வரையும், உயர் வகை ரூ. 118 முதல் ரூ. 125 வரையும் இருந்தது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பான விற்பனை அதிகரித்து இருப்பதால், ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகளின் பங்களிப்பு குறைந்து, விற்பனையும், விலையும் சரிந்துள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...