தமிழகத்தில் முதல்முறையாக பூனைகளின் நலன் காக்கும் கிளப் கோவையில் துவக்கம்

கோவை : பூனை ரசிகர்களின் கூட்டணி ஆதரவுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக பூனைகளுக்கென ‘கோவை கேட்டரி கிளப்’ கோவையில் துவக்கப்பட்டுள்ளது.


கோவை : பூனை ரசிகர்களின் கூட்டணி ஆதரவுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக பூனைகளுக்கென ‘கோவை கேட்டரி கிளப்’ கோவையில் துவக்கப்பட்டுள்ளது. 

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரோட்டரி கிளப்பில், கேட்டரி கிளப் இன்று துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான பூனைகள் பற்றி விளக்கப்பட்டன. பூனை நிபுணர் மற்றும் நீதிபதியான பெங்களூருவை சேர்ந்த சுதகார் கேடிகினேனி, கிளப்பை துவக்கி வைத்தார். கோவை கேட்டரி கிளப் அறிமுக விழாவில் பூனை ரசிகர்கள் பலர் பங்கேற்றனர். செயலாளராக ஆன்னி கரோல், ரீகன், இணை செயலாளராகவும், பொருளாளராக பிரதீபாவும் பொறுப்பேற்றனர்.



பின்னர், கோவை கேட்டரி கிளப் தலைவர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கேட்டரி கிளப், பூனைகளின் நலனுக்காகவும், பூனைகளை நேசிப்பவர்களுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் துவக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 5 வகையான பூனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கிளப்பின் முக்கிய நோக்கம், வளர்க்கப்படும் பூனைகளின் தரத்தை மேம்படுத்துவது தான். இந்த கிளப், பூனைகளை ஆரோக்கியமான முறையில் வளர்க்க வழிகாட்டும், என்றார்.

பூனைகளின் முக்கியத்துவம் கருதி கோவை கேட்டரி கிளப், ஒரு பூனை கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் பூனை விரும்பிகள், வளர்ப்போர் மற்றும் வணிகர்கள் இதன்துவக்க விழாவில் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...