நீலகிரி : 123-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து சீரமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் காவல்துறை சார்பில் டிரோன் கேமரா இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரியில் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட காவல்துறை எடுத்துள்ளது. நகரில் பொருத்தப்பட்டுள்ள 22 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து மூன்று மொழிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும், கண்காட்சியை துவக்கி வைக்கவும், இறுதி நாள் பரிசலிப்பு விழாவிலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை நகரில் போக்குவரத்து சீரமைப்பிற்காகவும், குற்றச்செயல்களை தவிர்க்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் 5 ஹெலிகேம் (டிரோன்) கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா உத்தரவின் பேரில், மலர் கண்காட்சி நடைபெறும் 5 நாட்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்ல சாலை, லவ்டேல் சந்திப்பு, படகு இல்லம், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.