கோவை : சூலூர் தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை : சூலூர் தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மொத்தம் 2,95,158 வாக்காளர்கள் வாக்களித்து தங்களது தொகுதி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை இடையார்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளா பாதுகாப்பு ஏற்படடுகள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினார். அதோடு, வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரம் முறையாக செயல்படுகின்றனவா என்றும் சோதனை செய்தார்.