கரூர் : அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குப்பதிவை தி.மு.க. வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
கரூர் : அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குப்பதிவை தி.மு.க. வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது :-திராவிட முன்னேற்றக் கழகம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். மேலும், மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். தேர்தல் விதிப்படி வாக்காளர்களுக்கு தேர்தல் சின்னத்தை சொல்லக்கூட விடாமல், காவல் துறை கெடுபிடியாக செயல்படுவது குறித்து தலைமைக்கு தெரிவித்திக்கிறேன். தனியார் இடத்தில் நான்கு பேர் கூட்டாக நிற்கக் கூட விடாமல் காவல்துறை வழக்கு போடுவதாக மிரட்டுகிறது. இது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம், என தெரிவித்தார்.