திருமங்கலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறுவாக்குப்பதிவு

திருப்பூர் : ஈரோடு நாடாளுமன்றத்திற்குட்பட்ட திருமங்கலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் : ஈரோடு நாடாளுமன்றத்திற்குட்பட்ட திருமங்கலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட 248-வது வாக்குச்சாவடியில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற வாக்குப்பதிவு துவங்கியபோது மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அதனை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. திருமங்கலம் வாக்குச்சாவடியில் மொத்தம் 918 வாக்குகள் உள்ளன. 736 வாக்குகள் பதிவானது. இத்துடன் மாதிரி வாக்கு 41 சேர்ந்து 777 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வித்தியாசம் காரணமாக, அரசியல் கட்சிகள் புகாரை தொடர்ந்து, மறுவாக்குப்பதிவை இன்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 



இதனடிப்படையில், திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு துவங்கி மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது. 



இதில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...