கோவை : சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி மயில்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மயில்சாமி முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மயில்சாமி பேசியதாவது :- எனது ஜனநாயக கடமை நிறைவேற்றியுள்ளேன். சூலூரில் நடக்கும் வாக்குப்பதிவு மனநிறைவாக உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் ஒளிபெறும்.

சூலூர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக தெரிகிறது. கமல்ஹாசன் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததால், கொந்தளிப்பான நிலைமை இருந்ததால், தேர்தலை இரத்து செய்ய கோரினோம். தற்போது, அந்த அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தடைக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு அதிகரித்துள்ளது,என தெரிவித்தார்.