சூலூர் இடைதேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி நம்பிக்கை

கோவை : சூலூர் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் எனவும், பொதுமக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படும் என வாக்களித்த பின்னர் வேட்பாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


கோவை : சூலூர் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் எனவும், பொதுமக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படும் என வாக்களித்த பின்னர் வேட்பாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், சூலூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 7 மணி முதல் துவங்கியது. சூலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் காலை 6.30 மணி முதலே மக்கள் ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், வரிசையில் நின்று தங்களது வாக்கை அளித்து சென்றனர். இந்த நிலையில், சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி வதம்பச்சேரி ஊராட்சி, சவுடேஸ்வரி நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அ.தி.மு.க.வின் வெற்றி 15 நாட்களுக்கு முன்பே வெற்றி உறுதி செய்யப்பட்டது. இங்கு அமோக வெற்றி பெறுவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் இங்கு நிறைவேற்றி உள்ளோம். வெற்றி பெற்றால் இங்குள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலைகள் செப்பனிடப்பட்டு, வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சூலூர் பகுதியில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு, இங்கு உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்வேன், என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...