சூலூர் சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை : தேர்தல் அலுவலர் தகவல்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் பதட்டமானவை என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் பதட்டமானவை என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 82 விதமான பொருட்களை அனுப்பும் பணி, சூலூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அருண்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 324 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான தள்ளுவண்டிகளும் வாக்குச் சாவடிகளுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது. சூலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.,அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் உட்பட 22 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.



இதனிடையே, சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சூலூர் தொகுதியில் 324 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பணிக்கு என 1,800 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படும். சூலூர் தொகுதியில் பதட்டமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 32 இடங்களில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.



துணை ராணுவம் வீரர்கள் 212 பேர் உட்பட தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,423 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 102 பேருக்கும், 76 முன்னாள் ராணுவத்தினருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 102 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள தபால்வாக்குகளில், 14 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன, என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...